கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் வாய்ப்பு

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இருதரப்பு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொரன்ரோவில் உள்ள இந்திய கனேடிய வர்த்தகர் சங்கத்தில் இடம்பெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் கனேடிய அனைத்துலக வர்த்தக அமைச்சர், பரிசில் இடம்பெற்ற அமைச்சரவை மட்ட மாநாட்டில், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து இது குறித்துப் பேசியதாக தெரிவித்துள்ளார்.

தங்களின் சந்திப்பின் போது குறித்த இந்த ஒப்பந்த விவகாரத்தினை இறுதி செய்வதற்கான நாள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு நேரடியாக பயணம் மேற்கொண்டிருந்த போதும் இது குறித்துப் பேசியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த இந்த உடன்பாட்டினை இறுதிசெய்து, முடிந்தவரை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதில் இரு தரப்பும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புகளின் ஊடாகவும் பல்வேறு சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்