லண்டன் – கிரென்பெல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு LYCA நிறுவனம் கரம் கொடுக்கின்றது

மேற்கு லண்டன், கென்சிங்டன் வடக்குப்பகுதியில் உள்ள கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக Lycamobile நிறுவனம் ஒருலட்சம் பவுண்ஸ்கள் நிதியை (£100,000 ) வழங்குகின்றது.

புதன்கிழமை விடியற்காலைவேளை கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு இதுவரையில் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த துக்ககரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதிசேகரிப்புக்கள் நடைபெற்றுவரும்நிலையில் Lyca குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் Evening Standard பத்திரிகை நிறுவனத்தின் உதவித் திட்டத்தினூடாக ஒருலட்சம் பவுண்ஸ்கள் நிதியை (£100,000 ) வழங்குகின்றார்.

இதேவேளை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள 116 Bramley Rd, London W10 6SU என்னும் முகவரியிலுள்ள லற்றிமெர் கொமியூனிட்டி தேவாலயத்தில் (latymer community church ) இல் Lycamobile அங்கத்தவர்கள் தொண்டுப்பணிகளை முன்னெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்