பௌத்த மதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம்: மஹிந்த

தனது மதத்துக்காகவும், இனத்துக்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, இந்த அரசாங்கத்தால் சட்டம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாத்தறை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றின் கட்டடத்தை நேற்றைய தினம் (சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”பௌத்த மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. புதிய சட்டங்களைக் கொண்டு வந்து மதம், இனம் என்பவற்றிலிருந்து மக்களைத் தூரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, சமயத்தின் மீதுள்ள பற்று அதிகரிக்குமே தவிர அவை குறைவடையாது.

இந்த அரசாங்கத்தில் பௌத்த பிக்குகளும், நாட்டுக்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றியவர்களுமே அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்