சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

சிம்பு தன்னுடைய படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் தன்னால் முயன்ற உதவியை செய்து வருகிறார்.

அதாவது மற்ற நடிகர்களின் படங்களில் பாடுவது, ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போன்று செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அரவிந்த் சாமியின் பிறந்தநாள். இதனால் இன்று அரவிந்த சாமி, செல்வா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாவதாக செய்திகள் வந்தது. தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அரவிந்த் சாமி ரசிகர்கள் சிம்பு எப்போது வெளியிடுவார் என அவரின் டுவீட்டுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்