ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதி: டேவிட் டேவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குகின்றேன் என்ற வகையில் கூறுகின்றேன். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் வெளியேறுகின்றோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பிரெக்சிற்றானது பிரித்தானியாவின் பிரகாசமான புதிய எதிர்காலத்திற்கு வாய்ப்பளிக்கின்றது. எமது எல்லைகளை கட்டுப்படுத்தவும் சொந்த சட்டங்களை நிறைவேற்றவும் சுதந்திரம் உண்டு. எனவே பிரெக்சிற் நடவடிக்கையில் நாம் பின்வாங்கப் போவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்