வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் காயம் : லிந்துலையில் சம்பவம்

லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளி மலை பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு தனது வீட்டின் முன் வாசலில் கிடந்த பொதி ஒன்றினை தடி ஒன்றினால் தள்ளியபோது பொதியினுள் காணப்பட்ட வெடி பொருள் வெடித்து தான் காயமடைந்ததாக தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் லிந்துல பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்