பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கையளித்தார்.

கனடாவில் வசிக்கும்புங்குடுதீவைச்சேர்ந்த திருமதி சாந்திமதி பன்னீர்செல்வம் அவர்களின் கணவரான நவரத்தினம் பன்னீர்ச்செல்வம் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர்ப்போத்தல்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு   (18.05.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் அதிபர் குலசேகரம் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு அலுமினியத்தாலான குடிநீர்ப்போத்தல்களை மாணவர்களிடம் கையளித்தார். மாகாணசபை உறுப்பினருடன் கொடையாளரின் உறவினரும், காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆசியருமான ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் பெற்றோர், ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் நிலைமைகளைப்பார்வையிட்டதுடன், ஊர் மக்களின் குறைகளைக்கேட்டறிந்து உரியதரப்புகளுன் பேசி பிரச்சனைகளைத்தீர்க்க முயற்சிப்பதாக மாகாணசபை உறுப்பினர் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்