சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய 54வது வருடாந்த திருச்சடங்கு உற்சவ மடைப்பெட்டி எழுந்தருளும் நிகழ்வு

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய 54வது வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 2017
அருள் மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு உற்சவம் நேற்று(18.06.2017) மடைப்பெட்டி எழுந்தருளலுடன்   பக்தர்கள் படைசூழ திருக்கதவு திறக்கப்பட்டது.
மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வு சித்தாண்டி பிரதேசத்தின் உதயன்மூலை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்திலிருந்து மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.தொடர்ந்து திருக்கதவு திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடையம்.
அம்பாளின் உற்சவமானது 6 நாட்களைக் கொண்டது.நாளை (20.06.2017) 3ம் நாள் உதயன்மூலை மக்களால் நவச்தி கும்ப சிறப்பு  பூஜை இடம்பெறும். இறுதி 6வது நாளன்று (24.06.2017) அன்று காலை 7 மணியளவில் தீமிதிப்பு நடைபெறும்.
அனைவரும் வருக அன்னையின் இன்னருள் பெறுக.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்