உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில்……!!

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த 13வது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வும்   ஊடகவியலாளர் சந்திப்பும் பொது அறிவிப்பு 18ம் திகதி  ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு ஸ்காபறோ நகரில்  5310  Finch Avenue
East – Unit 10 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள  Prima Dance School  மண்டபத்தில் நடைபெற்றது.
அகில உலகத் தலைவராக கனடா திரு. வி. எஸ் துரைராஜா அவர்களும், கனடாவின் தலைவராக திரு. எம் றவிச்சந்திரன் அவர்களும், செயலாளர் நாயகமாக ஜேர்மனி திரு. துரை கணேசலிங்கம் அவர்களும், சர்வதேச ஊடகப் பொறுப்பாளராகவும் மாநாட்டின் கனடா செயற்பாட்டுக் குழுவின் தலைவராக திரு. ஆர். என். லோகேந்திரம் அவர்களும், இயக்கத்தின் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவராக கனடா வாழ் திரு. சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் பணியாற்றுகின்றார்கள்.
மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட நிர்வாக உறுப்பினர்களும், கல்விமான்களும், தொண்டர்களும் இலங்கையிலும், உலகின் பல பாகங்களிலிருந்தும் இம் மாநாடு வெற்றி பெரும் முகமாக உழைத்து வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்தில் இவ்விழா நடைபெறுவதற்கு புதிய துணைவேந்தர் ஒப்புதல் அளித்துள்ளமை மகிழ்ச்சி அடையவேண்டிய விடையமாக அமைகின்றது.
கனடாவில் இருந்து இயங்கிவரும்  நிறுவனமான உங்கள் பாதுகாப்புப்பின் முன்னோடியான TEKNO MEDIA INC. இவ் விழாவிற்கான பெரும் பகுதிப் பண உதவியை வழங்கி இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்களாக இடம் பிடித்துள்ளது.  இதன் பெருமை திரு. மதன் அவர்களையும் அவரது நிறுவனத்தையும் சேரும். உணர்வாலும் உடலாளும் தமிழனாக ஒன்று சேர்வோம் செயற்படுவோம்.
மேலதிக விபரங்களுக்கு:-
திரு. வி. எஸ். துரைராஜா:- 647-829-4044
திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம்- 416-732-1608

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்