மன்னாரில் தியாகிகள் தினம் அனுஸ்ரிப்பு

மன்னார் நிருபர்
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர்   கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம் இன்று(19) திங்கட்கிழமை மன்னாரில்  நினைவு கூறப்பட்டுள்ளது.
-மன்னாரில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் நினைவு கூறப்பட்டது.
-இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன்,மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் மெரினஸ் பெரேரா மற்றும் கட்சியில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர்   கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்