ஐ.தே.கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

அலரி மாளிகையில் இந்த விசேடக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அரசியலமைப்புத் திருத்தம், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம், மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை வழங்குதல் தொடர்பான விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இரண்டு கட்சிகளும் விரிவாகக் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்