ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் இதன் காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்