உலக ஹொக்கி லீக் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

உலக ஹொக்கி லீக் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, தனது அரையிறுதிப் போட்டியை உறுதி செய்துள்ளது.

லண்டனில் நடைபெற்று வரும் ஹொக்கி லீக் போட்டியின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) காலிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியின் ஆரம்பம் முதலில் இருந்தே அபாரமாக விளையாடிய இந்திய அணி 7கோல்களை பெற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் ஒரு கோலை மாத்திரம் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. இதன்படி இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வெற்றிக்கொண்டது.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் “பி” பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, தன்னுடைய அரையிறுதிப் போட்டியை உறுதி செய்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்