ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க.வின் தீர்மானம் இன்று?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் நடைபெறவுள்ளது.

இதன்படி, கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தின் போது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக தலா 120 பேர் அடங்கிய 4 பட்டியலை பா.ஜ.க. தயார் நிலையில் வைத்துள்ளதாக கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்று பெயரிடப்படுவார் என்றும் இன்று அல்லது நாளை அவரது பெயர் அறிவிக்கப்படும் என்றும்  கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்