முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது, திடீரென அப்பகுதிக்குச் சென்ற முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதலை தற்போது பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் முதலமைச்சரின் ஆதரவாளர்களை அவ்விடத்திலிருந்து அகற்றியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் தற்போதும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலைமைகளையடுத்து, வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்