நெட்டிசன் நோட்ஸ்: இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்- நீங்கள் தேச துரோகியா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவை #INDvPAK #CT17Final என்ற ஹேஷ்டேகுகளில் இந்திய அளவில் ட்ரெண்டாகின. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

வேஷம் போடாதவன் @iam_Yobu

கிரிக்கெட் மேல இருந்த பைத்தியம் மட்டும் நம்ம தமிழ்நாடு அரசியல் மேல இருந்துருந்தா, நல்ல திறமையான அரசியல எப்பவே உருவாக்கி இருந்திருப்போம்!

சண்டியர் @BoopatyMurugesh

வயலிலும் சரி, கிரிக்கெட் மைதானத்திலும் சரி இந்தியர்களுக்கு வேண்டிய நேரத்தில் மழை வருவதில்லை.. #INDvPAK

K N A‏ @AlwaysKNA

கிரிக்கெட் போனா என்ன?- ஹாக்கிய பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான்! #INDvPAK

அம்மு‏ @itsNayagi

விடுயா… கிரிக்கெட் கண்டுபுடிச்ச சொந்த நாட்டுக்காரனே சொந்த நாட்டுலயே தோத்து போறான். இதுல நம்ம என்ன?

ஆல்தோட்டபூபதி‏ @thoatta 1

டிவி கீழ் இடதுல ‘கிரிக்கெட் பார்ப்பது உடல் நலத்துக்கு தீங்கானது, கிரிக்கெட் உயிரை கொல்லும்’ போட்டுவிடுங்க, off பண்ணிட்டு படுத்துக்கிறோம்

சத்யா_கேசவன்‏ @sathya_0555

அதெப்படி உங்களுக்கு ஹாக்கி தேசிய விளையாட்டு-ங்கற நியாபகம், இந்தியா கிரிக்கெட்ல தோக்கற அன்னைக்கு மட்டும் வருது?

MSDian‏ @ItzThanesh

#MSDhoni – நீ ஃபார்மில் இல்லாதபோது உன்னை வெறுக்க நான் கிரிக்கெட் ரசிகன் அல்ல, உடன் பிறவா சகோதரன்.

Joe Selva‏ @joe_selva1

இந்தியா ஜெயிச்சா அவ்வளவு கொண்டாடுற கிரிக்கெட் ரசிகர்கள், தோத்தா கோவத்துல உருவ பொம்மையை எரிக்கத்தான் செய்வாங்க …..

புகழ்‏ @mekalapugazh

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே இந்தியாதான் ஜெயிக்கும் என்ற நினைப்பை மாற்றிய பாகிஸ்தான் இளம் அணிக்கு வாழ்த்துக்கள்..

இரும்புகடை இயக்குனர்‏ @MohammedMastha

இந்தியா தோத்து போனதுகூட பரவாயில்ல, ஆனா பேப்பர்ல “இந்தியா அவுட்டு கோலி பதவி டவுட்டுனு”நியூஸ் போடுவாங்கனு நினைக்கும் போதுதான் பதறுது.

Dheena Shankar‏ @Dheena_shankar

இந்தியா தோக்குறது கூட வருத்தமா தெரியலை…ஆனா இந்த ஜடேஜா, பாண்டியாவை அவுட் ஆக்கி விட்டதுதான் ரொம்ப ரொம்ப கடுப்பா இருக்கு.

Shahjahan R

2015க்கும் 2017க்கும் ஒரே ஒரு வித்தியாசம்- அன்று இந்திய ஹாக்கி மகளிர் அணி வென்றது, அதைப் பற்றி யாருக்குமே தெரிய வரவில்லை. இன்று இந்திய ஹாக்கி ஆடவர் அணி வென்றது, கிரிக்கெட் நடைபெற்ற அதே லண்டன் என்பதாலும், தோற்றுப் போனது பாகிஸ்தான் என்பதாலும் இதைப்பற்றி சிலருக்குத் தெரிய வந்தது. அதுவும்கூட ஹாக்கி ஆட்டத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதல்ல, சும்மா போகிற போக்கில் தெரிந்து கொண்டது.

Pragash Ramadoss‏ @ramadosspragash

ஏங்க எப்பவாவது இந்தியா வெற்றி பெறலன்னா அத தோல்வினு எழுதுறிங்க. “இந்தியாவின் எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை வெற்றினு”ன்னு எழுந்துங்களேன்.

குழந்தை அருண் 2.0‏ @aruntwitzzz

கிரிக்கெட் பார்க்க வேண்டியது, ஜெயிச்சா கத்த வேண்டியது, தோத்தா திட்ட வேண்டியது, இதை விட ஏதாவது உருப்படியான வேலைகளிலிருந்தால் பாருங்கள் மக்களே…

Jay Kumaar‏ @Jaykumaar

இன்னைக்கி இந்தியா தோத்ததுகூட அவ்ளவா ஃபீல் ஆகல, ஆனா நேத்து முந்தாநேத்து கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சவங்கள்லாம் கோலிக்கு அட்வைஸ் பண்றத பாத்தாதான்…

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

தேசபக்தி என்பது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது மட்டுமே வெளிப்படுமென்றால் சத்தியமாக நான் தேசத் துரோகிதான்!

gautham‏ @gkgauthamganesh

கிரிக்கெட் விளையாட்டுல ஜெயிச்சவங்களுக்கு 14 கோடி, தோற்றவங்களுக்கு 7 கோடி, வெறுமனே வேடிக்கை பார்த்தவங்களுக்கு தெருக்கோடி.

Gowtham Gaja

கிரிக்கெட் என்னும் மாயவலையில் இருந்து என்னை மீட்ட கோலி படைக்கு நன்றி. 2003-க்குப் பிறகு பின்பு மிகப்பெரிய ஏமாற்றம், இனிமேல் “மண்ணெண்ண, வேப்பெண்ணெ, விளக்கண்ணெ, யாரு கப் அடிச்சா எனக்கு என்ன?”

S. Charu Hasan

அன்று ஒரு நாள் தோனி வீட்டை அடித்து நொறுக்கினோம்… இன்று கிரிக்கெட் கேப்டன் கோலி விட்டை உடைக்க ஆள் அனுப்பியிருப்போம்… சினிமா நடிகர்களும் கிரிக்கெட் பந்தாட்டக்கரர்களும் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கலாமா?

Elamathi Sai Ram

அட்டகாசமாக விளையாடி ஜெயித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாழ்த்துவோம். தோற்றவர்களை தூற்றாமல் அரவணைப்போம்.. நாமளாச்சும் விளையாட்டை விளையாட்டா அணுகுவோம் மக்களே..!

Shanmuganathan Swaminathan

கிரிக்கெட் தோல்வியில் கண்டு கொள்ளப்படாத இரண்டு கொண்டாட்ட தருணங்கள்.

1) ‘ஏழுக்கு ஒன்று’ என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தானுடனான ஹாக்கி வெற்றி.

2) இந்தோனேஷியன் ஒப்பன் பட்டத்தை வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி.

வெற்றிக்கு போகிற வழியில், அவர் உலக நம்பர் ஒன்னை தோற்கடித்ததை இங்கு குறிப்பிட வேண்டும். பாராட்டுகள்.

Sakthi Saravanan

பாகிஸ்தான் விர்ர்ர்ர்ர், இந்தியா கொர்ர்ர்ர், இந்திய ரசிகர்கள் கிர்ர்ர்ர்.

Dhana Sakthi

போராடவே இல்லை

சப்பைக்கட்டு

அப்புறம் வெற்றி மட்டும் இல்லை, எந்த மகிழ்ச்சியுமே கிட்டாது

#இது கிரிக்கெட் பதிவு அல்ல

Anas Sulthana

நீங்கள் பாகிஸ்தானுக்கு வாழ்த்து சொன்னால் நடுநிலைவாதியாக கருத்தப்படுவீர்கள் ஆனால் ஒரு முஸ்லீம் பெயர் தாங்கி வாழ்த்து சொன்னால் அவன் இருப்பே சந்தேகிக்கப்படும்..

இந்தியா கோப்பையை வெல்லாமல் போனது வருத்தம் தான் அதற்காக பாகிஸ்தான் அணியை வாழ்த்தாமல் விடுவது நாகரீகம் அல்ல… வாழ்த்துக்கள் பாகிஸ்தான். ஆனால் மீண்டும் உங்கள் அணியை வெல்லுவோம்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்