சிம்பாப்வே தொடரில் இலங்கை அணியின் தலைவர் இவர் தான்.

சிம்பாப்வே கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மண்ணிற்கு விஜயம் செய்து 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 18ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்குகொள்ள இலங்கை கிரிக்கட் சபை 30 வீரர்களை தெரிவு செய்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால இலங்கையிலுள்ள முன்னணி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கையில் “நாம் முதல் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு சிறந்த வலுவான அணியை தெரிவு செய்ய உள்ளோம், அந்த அணியை எஞ்சலோ மெதிவ்ஸ் வழிநடத்துவார். நாம் அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெறுமிடத்து நாம் எதிர்கால வீரர் ஒருவரை கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்க எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்கால வீரர் யார் என்பதை தீர்மானிக்க நாம் இம்மாதம் 29ஆம் திகதி நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்துரையாட உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்