குளிர்பான இடைவேளையின் போது ஸ்டோக்ஸிற்கு நேர்ந்த நிலை.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 1ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் மத்தியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸிற்கு வினோதமான ஒரு நிகழ்வை சந்திக்க நேரிட்டது.

போட்டியின் குளிர்பான இடைவேளையின் போது இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் திடீரெனெ மைதானத்தை விட்டு வெளியேறி தனது இயற்கை தேவையை நிறைவேற்ற கழிவறைக்கு சென்று இருந்தார். இதில் வினோதமான அம்சம் என்னவென்றால் அவர் மைதான பராமளிப்பாளர்களிடம் சென்று கழிவறைக்கு செல்லும் வழி தொடர்பில் வினவி இருந்தார். அப்போது மைதான பராமளிப்பாளர்கள் இந்த வழியால் வர முடியாது எனக்கூற ஸ்டோக்ஸ் தமது அணி இருந்த ஆடை மாற்றும் அறையில் இருக்கும் கழிவறை நோக்கி சென்றிருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தி இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்