சி.வி.க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் :விக்கி இற்கு சம்பந்தன் கடிதம்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு இன்று மாலை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அக்கடிதத்திலேயே நம்பிக்கை இல்லப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடையங்கள் வருமாறு

நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் தொலைபேசியில் தொடர்வு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்து இருந்ததாகவுயம் மேலும் சட்டபூர்வமானதும் சுதந்திரமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைக்ககூடாது என்பதன்னை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்