“நாட்டுல பிரச்சனை இருக்கலாம் ; பிரச்சனையே நாடா இருக்குது” – புட்டு புட்டு வைக்கும் மன்சூர் அலிகான்…!!!

தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு அனைத்தையும் பிடுங்கிவிட்டதாகவும், நாட்டுல பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே நாடா இருக்க கூடாது எனவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
திரைப்பட விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தமிழத்தின் நிகழ்வுகளையும் தற்போது நிறைவேறியுள்ள ஜி.எஸ்.டி பற்றியும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், மதுபானத்திற்கு ஜி.எஸ்டி வரி விதிக்க மாட்டார்கள் ஆனால் மனிதன் உயிர்வாழ சாப்பிடும் சாப்பாடு முதல் அனைத்திற்கும் மத்திய அரசு வரி விதிக்கிறது.
பணக்கார நாட்டில் தான் அனைவருக்கும் ஒரே வரியை அமைக்க வேண்டும். நாம் என்ன பணக்கார நாடா?
என கேள்வி எழுப்பினார்.
மற்ற நாடுகளில் பெட்ரோலின் விலை மிகவும் குறைவுதான் எனவும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் பங்குகளில் ஓவராக கொள்ளை அடிப்பதாகவும், குறிப்பிட்டு பேசினார்.
மேலும், தமிழ்நாட்டை வைத்து பிரதமர் மோடி குரங்கு வித்தை காண்பிப்பதாகவும், நாட்டுல பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே நாடா இருக்க கூடாது எனவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்