சவுதியின் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்த விசாரணைகளை மறைக்கும் மே

பிரித்தானியாவில் செயற்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு சவுதி அரேபியா நிதியுதவி செய்தமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகளை வெளியிட பிரதமர் தெரேசா மே மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்ற அச்சத்தில் இவ்வாறு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதில் அவர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென, தெரேசா மே உள்துறை செயலாளராக செயற்பட்ட கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனினால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆனால், குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை தெரேசா மே பிரதமராக பொறுப்பேற்ற பின்னரே வெளியிடப்பட்டது. குறித்த விசாரணையானது, பிரித்தானியாவிற்குள் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்களின் தோற்றம் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படும் நிதி என்பவை குறித்து ஆராயும் வகையிலேயே நிறுவப்பட்டது.

விசாரணைகளின் போது அத்தகைய பயங்கரவாதக் குழுக்களுக்கான சர்வதேசத்தின் நிதியிடல் குறித்த விபரங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்