ஜி-20 மாநாட்டில் ட்ரம்பிற்கு சவால்விடுக்கவுள்ள மே

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமர் தெரேசா மே, காலநிலை மாற்ற உடன்படிக்கை தொடர்பில் ட்ரம்பிற்கு சவாலை ஏற்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது என அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் பரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அது பிரதமர் மே-க்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அமெரிக்காவிற்கு சவால் விடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய மாநாட்டின் போது பரிஸ் உடன்படிக்கைக்கு பிரித்தானியாவின் பூரண ஆதரவை தெரேசா மே வெளிப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள ஜி-20 மாநாட்டின்போது வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்