உக்ரைனிற்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியா உக்ரைனிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் சீர்திருத்தங்களை வலுப்படுத்தல் மற்றும் நாட்டிற்கான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக உக்ரைன் பிரதமர் வோலோடிமைர் கிரோஸ்மான் (VOLODYMYR GROYSMAN) மற்றும் பொரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த உக்ரைன் பிரதமர், தனியார் மயமாக்கல், ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் நில சீர்திருத்தங்கள் தற்போது உக்ரைனில் நடைபெற்று வருகின்றது. இவற்றில் கணிசமான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனினும் கிழக்கு உக்ரைனிலும் கிரைமியாவில் ரஷ்யாவை எதிர்ப்பதற்கு ஒற்றுமை வேண்டும். அதேவேளை ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் அகற்றப்பட கூடாது’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர், நாட்டின் முதலீட்டு வாய்ப்புள்ளளை அதிகரிப்பதற்கான சரியான திசையில் உக்ரைன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்