மட்டக்களப்பில் மாரியம்மன் சடங்கு

வைகாசி மாதம் தொடங்கியதும் கிழக்கிலங்கையிலே குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் சடங்குக் கோயில்கள் முக்கியம் பெறுகின்றது.ஆகமம் சாரா வழிபாட்டு முறைகளையே பெரும்பாலான அம்மன் கோயில்களில் காணக்கூடியதாகவுள்ளது.சிறு தெய்வ வழிபாடு மற்றும் ஆகம வழிபாடு என்று கடவுளை வகுப்புவாதத்திற்குள் மனிதர்களே உட்புகுத்தியுள்ளனரே அன்றி கடவுள் வகுப்பு வாதத்தை தோற்றுவிக்கவில்லை என்பதை நாமனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

சடங்கு என்ற சொல் மதரீதியாக அல்லது சமூக ரீதியாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையை குறிக்கின்றது.சடங்கானது ஒரு குறிப்பிட்ட நியமத்தின் படி செய்யப்படவேண்டிய ஒரு காரியமாக அமைகிறது.மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுதெய்வக் கோயில்களில் வருடா வருடம் குறித்த மாதத்தில் குறித்த திகதியில் அம்மனின் மூலஸ்தான கதவு திறந்து நம்பிக்கையின் அடிப்படையில் சடங்கு செய்யப்படுகின்றது.இச்சடங்கு விடயங்கள் மேலைத்தேய சமூகத்தினருக்கு ஒரு புது விதமான அனுபவத்தை கொடுப்பதாக அமையலாம்.

தீண்டத்தகாதவனொருவன் தான் பிராமணன் என ஏமாற்றி ஒரு பிராமண கண்ணிப் பெண்ணை மணம் செய்து கொண்டான்.திருமணத்தின் பின் தான் ஏமாற்றப்பட்டதையறிந்து அப்பிராமணப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் இதன் பின் அவள் மாரியம்மன் என்ற பெண் தெய்வமாக மாறி தன் சக்தியால் தன்னை ஏமாற்றியவனை சாம்பலாக சுட்டெறித்தாள் என்ற ஐதீகக் கதை மாரியம்மனின் தோற்றம் பற்றி கூறுவதாகவுள்ளது.

பிறிதொரு ஐதீகக் கதையின் படி மிகவும் தூய்மையான பெண்ணொருவள் முனிவரொருவரை மணம் செய்தாள்.அவள் கற்புக்கரசியாதலினால் அதிசயமான ஆற்றல்கள் அவளிடமிருந்தது.தண்ணீரெடுக்க வேண்டுமாயின் வெறும் மணலிலே பாத்திரங்களை உருவாக்கவும் வென்னீர் வேண்டுமாயின் நீர்ப்பாத்திரத்தை தன் தலையில் வைப்பதன் மூலம் பெறக்கூடியதாயிருந்தது.ஒரு நாள் ஆணும் பெண்ணுமான காந்தர்வர்கள் இருவர் காதல் புரிவதைக் கண்டு தன்னுணர்ச்சியிழந்தாள்.இதனால் அவள் தன் ஆற்றல்களை இழந்துவிட்டால்.இதனையறிந்த கணவன், மனைவி கற்பிழந்தாளெனக் கருதி அவளை கொலை செய்துவிடும்படி தன் மகனுக்கு கட்டளையிட்டார்.தந்தை சொற் சிரமேற்க்கொண்டதால் தந்தை, தன் மகனின் விருப்பத்தின் படி தலையையும் உடலையும் ஒன்று சேர்த்தாள் தாய் உயிர்பெற்றெழுவாள் எனக் கூற மகனும் தன் தாயின் தலையை தற்செயலாக தீண்டத்தகாதாளொருத்தியின் உடலுடன் சேர்க்க அதனால் மாரியம்மன் தோன்றினால்.இவ்வைதிகத்தின் படி மாரியம்மன் தலை பிராமணத்தியினுடையது.உடலோ தீண்டத்தகாதவொருத்தியுடையது.கிராமிய வாழ்க்கையில் பிராமணரை முதன்மை சாதியாகக் கொண்டு ஏனையோர் கீழ் நிலையடுக்கில் வைக்கப்பட்டவாற்றை மேற்படி மாரியம்மன் ஐதீகம் புலப்படுத்துகின்றது.

தொல்மரபுக் கதைகளின் வழி மாரி உமையின் இளைய சகோதரியாவாள்.பார்வதி வேதநெறியிற் போற்றப்படும் தெய்வம்.ஆனால் மாரியம்மனுக்கு கிராமிய வழிபாட்டுப் éசை உபசாரங்களே நடாத்தப்படுகின்றன.மாரி திருமணம் ஆகாத கன்னித்தெய்வம்.ஆயினும் தன் தவவலிமையினால் சிவனிடம் குழந்தைவரம் பெற்று காத்தவராயனை தனது வளர்ப்புப் பிள்ளையாக வளர்த்தவள்.

சிவன்,திருமால்,பார்வதி முதலிய சகல தெய்வங்களும் மாரிக்கு பீதியடையும் தெய்வங்களாகவுள்ளன.மாரியம்மன் மக்களிடம் கருணை கொண்டவளாகவும் அடியார்களை ஆதரிப்பவளாகவும் அகங்காரங்கொண்ட ஆங்காரமாரியாகவும் படைக்கப்பட்டுள்ளாள்.

மழை வேண்டியும் விளைச்சலை அதிகரிக்கவும் வளம் வேண்டியும் கொடிய நோய்களைப் போக்கவும் போரிலே வெற்றி பெறவும் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் தேவைகளை éர்த்தி செய்யும் நோக்குடனேயே கிராமியச் சமயச்சடங்குகள் வருடா வருடம் குறித்த காலப்பகுதியில் கதவு திறந்து மடை வைத்து éசை நடாத்தப்பட்டு வருகின்றது.

மாரி என்பது Àய தமிழ்ச் சொல் இதனால் மாரியம்மன் வழிபாடு தமிழ்நாட்டிலேயே தோற்றம் பெற்றது.பாண்டிய நாட்டில் மாரி மழை குன்றும் போதெல்லாம் கண்ணகியின் சாபத்திற்கு பயந்து கண்ணகிக்கு வேள்வி செய்வது பாண்டிய நாட்டு வழக்கம்.இரண்டாம் பாண்டிய பேரரசை அடுத்த காலத்தில் கண்ணகிக்கு செய்யப்பட்ட இத்தகைய வேள்வியால் மாரி பொழியவே ‘மாரியைத் தந்த கண்ணகி மாரியம்மன் என’ அழைக்கப்படலானாள்.

மட்டக்களப்பில் பண்டைய நாளில் வாழ்ந்து வந்த ஆதிக்கூடிகளாகிய வேடரிடமும் ‘விவசாய அன்னை வழிபாடு’ இருந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.வேடர்கள் புதிதாக தங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை வைத்து அன்னை தெய்வத்தை வழிபாடு செய்தனர்.

ஆதித்திராவிட மக்களிடம் காணப்பட்ட விவசாய அன்னை வழிபாடும் பாண்டிய நாட்டில் கண்ணகி வழிபாட்டில் இருந்து தோன்றிய மாரி வழிபாடும் இணைந்ததே இன்றைய மாரியம்மன் சடங்கு வழிபாடாகும்.

மட்டக்களப்பு பிரதேச மக்களால் பெரிதும் பாராயணம் செய்யப்படுவது ‘அமிர்தபரி éரணி நளின விழி காரணி அன்னபரி éரணி சொர்ணமருள் பாகரிதிமிர்ததிமி திமியென நடனமிடுமகமாரி’ எனத் தொடங்கும் மாரியம்மன் காவியமானது மட்டக்களப்புப் பிரதேசத்தில் வாழ்ந்த புலவரால்,கண்ணÁர் மாரியம்மன் மீது பாடப்பட்ட பாடலாகவுள்ளது.
‘ஈசனுடன் நாலு மறை வேத Áல்வாழி இந்து மதி யொத்தகை வீசுபரி வாழி வீசுபுக ளுறுராச சிங்கனும் வாழி’ என வழிபடுவதால் கண்டியை ஆட்சிசெய்த(1635 – 1644) இரண்டாம் இரசசிங்கன் காலத்தில் பாடப்பட்ட பாடலாக கொள்ளப்படுகிறது.
மேற்கூறித்த பாடல்களுக்கூடாக மாரியம்மன் உமாதேவியே என்பது மேலும் புலனாகின்றது.அட்டப்பள்ளம் சிங்காபுரம்,கோட்டைக்கல்லாறு மாரியம்மன் போன்ற கோயில்களின் மீது பாடப்பட்ட மாரியம்மன் தலாட்டுக்காவியமானது தமிழ்நாட்டில் உள்ள தலாட்டினை பெரிதும் ஒத்ததாகவுள்ளது.
அமரர் கணபதிப்பிள்ளை அவர்களே ‘மகமாரிதேவி திவ்ய காரணி’ என்ற Áலினை எழுதியதுடன் மாரியம்மன் காவியம்,தலாட்டு, கும்மி,ஊஞ்சல் போன்ற பல்வேறு மாரியம்மன் பாடல் வடிவங்களையும் அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும்.அட்டப்பள்ளம் சிங்காபுரம் மரியம்மன் மீது இவர் பல பாடல்களை பாடி மாரியம்மனின் வரலாற்றை உலகறியச் செய்துள்ளார்.

இவற்றோடு காத்தவராயன் கூத்து,கரகாட்டங்கள்,காத்தவராயன் சிந்து போன்றவை மாரியம்மன் வழிபாடு பற்றிக்கூறுவதனுடன் மாரியம்மனின் வரலாற்றையும் புராணச் செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது.
உமாதேவியே மாரியம்மனாக விளங்குகின்றால் என்பதோடு மாரியம்மன் நாரயணனின் தங்கையென்றும் பல Áல்களில் குறிப்பிடப்படுகின்றது.மாரியம்மன் எக்களாNவி என்றும் முனி பத்தினி மாரியம்மன் என்றும் குறிப்பிடப்படுகின்றது.பார்வதியின் வடிவமே மாரி என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஏனைய பெண்தெய்வங்களின் (அம்மன்) பெயர்களிலிருந்து ‘மாரியம்மனின் பெயர் மட்டுமே ‘சிவமுத்துமாரி,முனிபத்தினிமாரி’ என சிவபெருமானின் நாமத்தோடு அமைவதைக் காணலாம்.தீ மிதிப்பானது,எக்களாதேவி அம்மனுக்காகவே சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருந்தவம் இருந்து சிவபெருமானிடம் பதினெட்டு(18) முத்துக்களையும் 4448 வியாதிகளையும் கோர்த்த கண்டசர மாலையை வரமாகப்பெற்றவள் மாரி என்றும் கூறப்படுகின்றது.மட்டக்களப்பு பிரதேசத்தில் மாரியம்மன் சடங்கு ஆனி,ஆடி மாதங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது.மாரியம்மன் சடங்கு வழிபாட்டில் கும்பம், முகக்களை, வெள்ளிப்பிரம்பு,உடுக்கை, வாள்,வேப்பிலைக்கொத்து,அம்மானைக்காய்,கைச்சிலம்பு போன்றன முதன்மையான சின்னங்களாகக் கொள்ளப்படுகின்றன.
பொதுவாக மாரி அம்மன் சடங்குகளிலே உருவேறிதெய்வம் ஆடல், ஊர் காவல் பணணல், கல்யாணச் சடங்கு, வட்டுக்குத்துச் சடங்கு, விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணல்,தவநிலை, காத்தனை களுவேற்றல், சமுத்திர நீராடல்,மஞ்சள் குளித்தல், தீமிதிப்பு,திருக்குளிர்த்தி பாடுதல், பள்ளயம் முதலியன முக்கிய சடங்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
மாரியம்மன் சடங்குக் காலங்களில் பக்தர்கள் தங்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை காலம் தவறாது ஒவ்வொரு வடமும் மேற்க்கொண்டு வருவது வழக்கமாகும்.அதாவது கற்éரச்சட்டி எடுத்தல்,பொங்கல் பொங்குவது,தெய்வமாடல், காவடி எடுத்தல் போன்றவற்றை மேற்க்கொள்வர்.

இறுதி நாளன்று திருக்குளிர்த்திப் பானை எழுந்தருளச் செய்து திருக்குளித்தி நிகழ்வு இடம்பெறும்.இதன்போது இருவரால் திருக்குளித்திப் பாடல் பின்வருமாறு பாடப்படும்.பாடல் தருவில் பாடி முடிந்ததும் குளிர்ந்தருள்வாய் என முடியும்.

‘éவி லுதித்த புவன தயாபரி
éவையே எந்தன் மணமிங்கத்
தாவிய வெப்புவை சூரிய கற்றத்
தாயே நீ கோபந்தனிந்தருளம்மா’

‘பொன்னுலகம் தன்னில் நின்று
éவுலகந்தை தேறிறங்கி
அன்ன மெனவே நடந்த
அம்மே குளிர்ந்தருள்வாய்’

எனத் தொடர்ந்து பாடி ‘இறுதியில் பாடினோர்’
வாழி பழுதகற்றினோர் வாழி நாடி அட்ட சக்தியுடன் நாயகியும் வாழியவே திருச்சிற்றம்பலம் என்று சொல்லி மாரியம்மன் திருக்குளித்திப் பாடல்களை முழுமையாக நிறைவு செய்கின்றனர்.

மாரியம்மன் சடங்கின் ஒரு பகுதியாகவே காத்தவராய சுவாமி வழிபாட்டை அறியக்கூடியதாகவுள்ளது.இலங்கையில் காத்தவராயன் சுவாமி வழிபாடு மாரியம்மன் கோயிலைச் சார்ந்தே பெரிதும் இடம்பெற்று வருகிறது.காத்தவராயனின் கதை,பிறப்பு பற்றி ஆராயின் பல்வேறுபட்ட கதை மரபுகள் இருப்பதையும் முக்கியமாக கவனத்திற்கொள்ளவேண்டும்.

தென்னிந்தியாவில் வழங்கும் காத்தவராயன் கதைகளில் முருகனே காத்தவராயனாக அவதாரம் எடுத்த செய்தி கூறப்படுகிறது.காத்தவராயன் சண்டை எனும் காத்தமுத்து நாடகம் என்ற Áலில் சிவனது கட்டளைப்படி உமை éலோகத்தில் பிறந்து நந்தவனங்களை அமைத்து தவமிருந்த போது அந்த நந்தவனத்தின் காவலாளனாக முருகன் அவதரித்து காவல் காத்தமையாலும் காத்தவராயர் என்ற பெயரைப் பெற்றதாகவும் கதை அமைந்துள்ளது.

ஆனால் ஈழத்துக் காத்தவராயன் பாடல்களில்,மாரிக்கு குழந்தை கிடைக்கக்கூடாது எனச் சிவனும் திருமாலும் சாபம் போடுகின்றனர்.இதனை நாரதர் மூலம் அறிந்த மாரியம்மன் குழந்தை வரம் பெறுவதற்காக கடுந்தவமிருக்கிறாள்.அப்போது சிவன் பெண் மானாகவும் திருமால் ஆண் மானாகவும் வடிவெடுத்து மாரியின் அருகே ஒரு மான் கன்றை ஈன அது குழந்தை போல் அழ தவமிருந்த மாரி குழந்தை அழும் குரலைக்கேட்டு அதனைத் Àக்க அது ஆண் குழந்தையாக மாறுகிறது.மாரி அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறாள்.கங்கை பெருக்கெடுத்து மாரியையும் குழந்தையையும் அழிக்க வந்தபோது குழந்தை தன் காலால் மறித்துத் தாயை காப்பற்றியமையால் அக்குழந்தைக்கு காத்தான் என்ற பெயரை மாரி வைக்கின்றாள்.

இவை யாவற்றுக்கும் வேறுபட்ட வகையில் காத்தவராயன் கதைப்பாடல் என்ற Áலில் (பதிப்பு – நா.வனமாலை,மதுரைப் பல்கலைக்கழகம் 1971) பறையர் குலத்தில் பிறந்தவனாக காத்தவராயன் சித்திரிக்கப்பட்டுள்ளான் என கூறப்பட்டுள்ளது.பொதுவாக பெருமளவாக காத்தவராயன் சண்டை எனும் காத்தமுத்து நாடகம்,காத்தவராய சுவாமி கதை, காத்தவராயன் கதைப்பாடல் போன்ற Áல்களுக்கூடாகவே காத்தவராயனின் பிறப்பு வளர்ப்பை அறியக்கூடியதாகவுள்ளது.

புராணக் கதைகளின் வழியே நோக்கும்போது காத்தவராயர் காவல் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.காத்தவராயசுவாமி வழபாடு தமிழகத்திலும் ஈழத்திலும் பரவலாகக் காணப்படுகிறது.மட்டக்களப்பு பிரதேசத்தில் மாரியம்மன் கோயில்களில் காத்தவராய சுவாமிக்கு வழிபாடு நடைபெறுவது வழக்கமாகும்.மாரியம்மன் சடங்கு நிகழும் போது காத்தவராயராக உருக்கொண்டு தெய்வமாடும் பக்தர் பலருள்ளனர்.மலையகப் பகுதிகளிலும் மாரியம்மன் வழிபாட்டுடன் காத்தவராயர் வழிபாடும் நடைபெறுகிறது.

வன்னிப் பகுதியிலுள்ள புதுக்குடியிருப்பு மாரியம்மன் கோயில்,வட்டுவாகல் கன்னியர் கோயில் ,திருகோணமலை சல்லிச்சி அம்மன் கோயில் போன்ற இன்னோரன்ன மாரியம்மன் கோயில்களில் காத்தவராயசுவாமி வழிபாட்டுக்குரியதாக கழுமரம் ஒன்று அமைந்து காணப்படுகின்றது.பொதுவாக மாரியம்மன் சடங்குக்காலங்களில் காத்தவராய சுவாமிக்கென தனிப் பந்தல் அமைக்கப்பட்டு தனி மடை வைத்து வழிபட்டு வருகின்றனர்.ஆனால் வட இலங்கையில் மட்டுமே காத்தவராய சுவாமிக்குத் தனியாக அமைந்த கோயில்கள் அதிகளவாக இருக்கின்றன.

மாரி என்பது மழை எனவும் பொருள்படும்.எனவே மாரி மழையைத் தரும் தெய்வமாகவுள்ளது.மழை பொழிந்து வளம் சௌபாக்கியம் போன்றவற்றை தருபவளாகவும் குளிர்ச்சியை தந்து வரட்சி வெப்பம் என்பவற்றால் ஏற்படும் தீமைகளைப் போக்குபவளாகவும் மாரியம்மன் அருள்பாலிக்கின்றாள்.எனவே தான் மாரியை வழிபடும் பக்தர்கள் மாரி புதல்வனையும் வழிபட்டு காத்தான் கூத்தை நேர்த்தியாக நடாத்தி மாரியின் அருள் வேண்டுகின்றனர்.

கடும் வெப்பம் காரணமாகத் தோன்றும் அம்மைநோய்,கண்நோய் முதலியவற்றை தடுப்பதற்காக வேண்டி கண்ணகி அம்மனுக்கு போர்த்தேங்காய் அடித்தல் ,கொம்பு முறித்தல் ,தேர்த்தட்டு எடுத்தல் முதலான சடங்குகளை கிழக்கிலங்கை வாழ் சைவத் தமிழ் மக்கள் நடத்துவது போல யாழ்ப்பாணக்குடா நாட்டிலும் முல்லைத்தீவுப் பகுதிகளிலும் காத்தவராயன் கூத்து நடாத்துவதன் மூலம் இந்நோய்களை தடுக்கலாம் என்ற நம்பிக்கை நிலவியமையும் நேர்த்திக்கடன் நிமித்தம் கூத்து நடாத்தினால் தொடர்ந்தும் ஒவ்வொராண்டும் கூத்து நிகழ்த்த வேண்டும் என்ற நம்பிக்கையும் அவ்வாறு கூத்து நடாத்த தவறுமிடத்து அவ் ஊரில் தீங்குகள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் வடமராட்சிப் பகுதியில் காணப்பட்டது.

நோய் போக்கவும் எடுத்த காரியம் கைகூடவும் கடல் வணிகம் வெற்றிகரமாக நடைபெறவும் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் வழிபாட்டு முறையடிப்படையிலேயே யாழ்ப்பாணக் காத்தவராயன் கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன.வெள்ளோட்டம், அரங்கேற்றம் போன்றவற்றுக்கு முன்பு இறைசந்நிதானத்தில் கூத்துக்காரர் வழிபாடியற்றலும் நோக்கத்தக்கது.எனவே யாழ்ப்பாணக் காத்தான் கூத்து என்பது ஒரு வழிபாட்டு நடைமுறையாகவே கொள்ளப்படுகிறது.பொதுவாக வடமராட்சிப் பகுதியிலே காத்தவராயன் கூத்து ஆடுவோர் காளி, மாரி வழிபாட்டினராகவுள்ளனர். காத்தவராயன் கூத்துப் பாடல்கள் நுட்பமான இசைப்பாணி வடிவங்களை கொண்டமைந்துள்ளது.

காத்தவராயன் கூத்தானது பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற ஒரு சில பிரதேசங்களிலேயே ஆடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

எனவே சுருக்கமாகக்கூறின் மாரியம்மன் சடங்கு வழிபாடோடு இணைந்ததாகவே காத்தவராயன் சுவாமி வழிபாட்டைக் அறியக்கூடியதாகவுள்ளது.சமயச் சடங்காட்டங்கள்,தெய்வமேறியாடல் போன்றவற்றின் போது பக்தர்கள் தன்னிலை மறந்து பிறிதொரு நிலைக்குச் செல்வதையும் அவர்கள் சடங்கின் ஊடாக உள ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்