காண்டம் இலவசம்.. அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் யார் தெரியுமா..?

புதிதாக திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு இலவசமாக காண்டம் வழங்கும் திட்டத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி தொடங்கிவைக்க உள்ளார். இந்திய நாட்டை பொருத்தவரை மக்கள் தொகை என்பது மிகப்பெரிய பிரச்சனை. அதுவும் குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் உத்தர பிரதேசத்தில் இது இன்னும் கூடுதலாக பாதிக்கும் விஷயம். மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச அரசு இதற்கு புதுவித திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை வரும் ஜூலை 11 தேதி உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். ஆட்சிக்கு வந்த நாள் முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் யோகி. இதற்கிடையே இவர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மாநில மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்