லண்டன் கேம்டன் லொக் சந்தைப் பகுதியில் பாரிய தீ

வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் லொக் சந்தைப் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் குறித்த சந்தைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 70இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீ மிக வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அருகிலுள்ள கட்டடங்களும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காணப்படுவதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த அனர்த்தத்தில் இதுவரை எவ்வித உயிராபத்துக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என லண்டன் அம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்