பிரித்தானியாவின் தீர்மானத்தை நியாயப்படுத்த அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மட்டும் போதாது: நீதியமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரித்தானியாவின் தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மட்டும் போதாது என பிரித்தானிய நீதியமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யை நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மட்டும் போதாது எனத் தெரிவித்த அமைச்சர், ஆனால் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் சிறந்தது என்றும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்