கனேடியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் பெண்களே அதிகம் நிராகரிக்கப்படுகின்றனர்!

கனேடியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் ஆண்களை விட பெண்களின் விண்ணப்பங்களே அதிகளவில் நிராகரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் சட்டமூலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஆங்கில மொழித் தேர்ச்சியில்லாமையே இதற்குப் பிரதான காரணமாக அமைவதாக குறித்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் 56,000 இற்கும் அதிகமானோரின் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுள் பெரும்பாலானோர்களின் விண்ணப்பங்கள் ஆங்கில மொழித் தேர்ச்சி இல்லாமை காரணமாகவே நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அகதிகளாகக் கனடாவினுள் வந்து, பின்பு கனேடியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2005-2009ஆம் ஆண்டு காலப்பகுதியை விட 2010-2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 சதவிகிதத்தால்; குறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்