உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு.

உங்கள் பாதுகாப்பின் முன்னோடி Teknomedia இன் அனுசரணையுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகின்றது என இயக்கத்தின் அகிலத் தலைவர் திரு. துரைராஜா (கனடா) எமது தழிழ் சி என் என் செய்தியாளருக்கு தெரிவித்தார்.
மேலும், செயளாலர் திரு துரை கணேசலிங்கம் (ஜேர்மன்) மாநாடு நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்தில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையாலும், தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாநாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மனி வாழ் அன்பர் சர்வதேச கிளைகளின் தொடர்பாளர் திரு இராஜசூரியர் இராமநாதன், இந்த மாநாட்டின் ஊடக ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலவர் மற்றும் அனைத்துலக கிளைகளினாலும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும்.
இவ்விழாவிற்கான சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி விழா வெற்றிபெற கல்வி இராஜாங்க அமைச்சருமான கௌரவ வே.இராதாகிருஸ்ணன்,தழிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி. வி. விக்கினேஸ்வரன்,பாராளமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன், வடமாகாண ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே, வடமாகாண அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம், யாழ் இந்திய துணைத்தூதுவர் சிறி. ஏ. நட்ராஜன் அவர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர், என்றும் தெரிவித்தார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு இனிதே நடை பெற தமிழ் சி என் என் குடும்பமும் வாழ்த்துகின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்