எட்டு ஆண்டுகளின் பின் புலிகளின் போர்க் கப்பல் இடமாற்றம்.

புதுக்குடியிப்பு-புதுமாத்தளன் இராணுவக் காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் “இசையரசி” என்னும் போர்க்கப்பல் இன்று இடம் மாற்றப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் போர்த்தளபடங்கள் சிலவற்றை மந்துவில் பகுதியில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தயுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போர்க் கப்பலை இலங்கை பொறியியல் இராணுவப் பிரிவினர் இன்று பிற்பகல் முல்லைத்தீவு யு35 பிரதான வழியூடாக நகர்த்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இலங்கை கடற்படையினரின் போர்க்கலங்களை தாக்கி அழிப்பதற்கு கடற்புலிகள் மகளீர் அணியினர் இந்தக் போர்க் கப்பலை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது

விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களை எட்டு வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் பாதுகாத்து வருகின்ற நிலையில் இந்த போர்க்கப்பல் இன்று இடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்