வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவரினால் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா

அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு

வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களின் அன்றாடக் கடமைகளை இலகுவாக்குவதற்காக எமது சங்கத்தின் சார்பில் 1090.45 டொலர்கள் பெறுமதியான இரண்டு மடிக்கணினிகளை அன்பளிப்புச் செய்துள்ளோம். இதற்கான நிதி அனுசரணையை வழங்கிய எமது நிர்வாகசபை உறுப்பினர் திரு பொன்னம்பலம் பாலசுந்தரம் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். மேலும் 2013ம் ஆண்டிலும் அதிபருக்கு  ஓர் மடிக்கணினியை வழங்கியிருந்தோம். அது தற்போது பழுதடைந்துவிட்டது. இதற்கான நிதி அனுசரணையை வழங்கிய பழைய மாணவரும் வர்த்தகப்  பிரமுகருமானதிரு குமார் சுப்பிரமணியம் அவர்களையும் இவ்வரிய சந்தர்ப்பத்தில் சங்கத்தின் சார்பில் நன்றியுணர்வுடன் பாராட்டி மகிழ்கின்றோம்.

எமது கல்லூரி தற்போது விளையாட்டுத்துறையிலும் ஒளிவீச ஆரம்பித்துள்ளது. அண்மையில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தடகள  விளையாட்டுப் போட்டி-2017 இல் எமது கல்லூரி மாணவர்கள் செல்வன் சுஜீவன் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தலில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கத்தையும் செல்வன் நிதுசன் ஈட்டி எறிதலில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்று எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களையும்  அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்களையும் அதிபரையும் தயார்ப்படுத்திய விளையாட்டு ஆசிரியர்களையும் எமது சங்கத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுவதுடன் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

தீவகமும் அதன் தலைசிறந்த கல்விக்கூடமான வேலணை மத்திய கல்லூரியும் இன்று எதிர்கொள்ளும் சவால்களில் வெற்றியீட்டுவதற்கு எமது சங்கம் தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும் பணிவன்புடன்தெரிவித்துக் கொள்கின்றோம்.

சி. இளஞ்செழியன் (தலைவர்)

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா

பிற்குறிப்பு: சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஆவணி மாதம் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்