ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து “மிதாலி ராஜ்” உலக சாதனை

 

 

பெண்கள் கிரிக்கெட்டின் ‘சச்சின்’ என்று போற்றப்படுபவர் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 34. நேற்று 34 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இதுவரை 183 ஒருநாள் போட்டிகளில், 5 சதம், 49 அரைசதம் உட்பட மொத்தம் 6,028 ரன்கள் எடுத்துள்ளார்.

இவ்வரிசையில் ‘டாப்–5’ வீராங்கனைகள்:

பெயர்/அணி போட்டி ரன் சராசரி

மிதாலி ராஜ்/இந்தியா 183 6,028 51.52

எட்வர்ட்ஸ்/இங்கி., 191 5992 38.16

பெலிண்டா/ஆஸி., 118 4844 47.49

ரோல்டன்/ஆஸி., 141 4814 48.14

கிளைய்ர் டெய்லர்/இங்கி., 126 4101 40.20

2

ஒருநாள் அரங்கில் 1500 ரன்களுக்கும் மேல் எடுத்த 44 வீராங்கனைகளில் மிதாலி ராஜ் (51.52), மெக் லான்னிங் (54.12, ஆஸி.,) என, இருவரது சராசரி மட்டும் தான் 50க்கும் மேல் உள்ளது. இந்திய வீராங்கனைகளில் மிதாலிக்கு அடுத்து, ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் 33.00க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

7

பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரைசதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமை மிதாலிக்கு உண்டு. இது தவிர, 2006, 2010ல் தொடர்ந்து 4 முறை அரைசதம் அடித்துள்ளார்.

9

ஒரு ஆண்டில் அதிக அரைசதம் அடித்த வீராங்கனைகளில் எல்ஸ் பெர்ரியின் (2016ல் 9 அரைசதம்) சாதனையை சமன் செய்தார் மிதாலி ராஜ் (2017ல், 9). இவர் இந்த ஆண்டில் களமிளறங்கிய 12 இன்னிங்சில் 621 ரன் (77.72) எடுத்துள்ளார்.

‘நாட் அவுட்’ ராணி

மிதாலி ராஜ் சதம் அடித்த ஐந்து போட்டிகளிலும் அவுட்டாகாமல் இருந்தார். தவிர, இவரது அதிகபட்ச ‘டாப்–10’ ஒருநாள் ஸ்கோரில், 9ல் அவுட்டாகாமல் இருந்துள்ளார். 27 முறை அரைசதம் அடித்த போது அவுட்டாகாமல் இருந்தார்.

இவர் களமிறங்கிய 163 இன்னிங்சில் (183 போட்டி), 49 முறை, அவுட்டாகாமல், ‘நாட் அவுட்’ ராணியாக வலம் வருகிறார்.

மூலக்கதை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்