கட்டுப்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும்: டேவிட் டேவிஸ்

அதிகபட்ச உறுதிப்பாடு, தொடர்ச்சித்தன்மை மற்றும் கட்டுப்பாடுகளுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் என பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரெக்சிற் சட்டத்தை வெளியிடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தயாராகி வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய சட்டவரைவில், ஐரோப்பிய சமூக சட்டங்களை ரத்து செய்தல், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரல், 2019 மார்ச் மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது திடீர் விதிமுறை மாற்றங்களை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் தெரேசா மே-யினால் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த சட்டவரைவானது இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம் எனவும் பிரெக்சிற்கு பொறுப்பான அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்