ஏலத்திற்கு வருகிறது எலிசபெத் மகாராணியின் கார்

எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பேர்க் கோமகன் பிலிப் ஆகியோர் பயன்படுத்திய கார் எதிர்வரும் 26ஆம் திகதி ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இக்காரானது கடந்த 2001ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2007 ஜனவரி மாதம் வரை பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் பாவனைக்கு உட்படுத்தப்படாது காணப்படுகிறது.

அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 149 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய குறித்த காரானது, சுமார் 55 ஆயிரம் பவுண்ட்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த காரானது டக்ஸ்ஃபோர்டிலுள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஏலத்திற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்