இன்றோடு முடிகிறது: மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லாம்.

ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி என்று தனி ஆதிக்கம் செய்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதேபோல, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும்தான்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆகியவை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

எனவே, இந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றுடன் முடிவடைகிறது.

இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘விசில் போடு… சி.எஸ்.கே. ரிட்டர்ன்ஸ்…’ என டுவீட் செய்துள்ளது.

இதனால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், அடுத்த இன்னிங்சில் களமிறக்கவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்