ஐந்து மடங்கு-தமிழ் ஆங்கிலத்தில் எப்படி …!

பங்குச் சந்தையிலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ நீங்கள் செய்த முதலீடு இரு மடங்காக உயர்ந்தது எனில், ‘லாபம் டபிளாயிடுச்சு’ என்போம். இதுவே மூன்று மடங்காக உயர்ந்தால், ‘லாபம் ட்ரிப்பிளாயிடுச்சு’ என்போம்.

ஆனால், நான்கு மடங்கு பெருகினால் அல்லது ஐந்து, ஆறு மடங்கு பெருகினால்… அதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவீர்கள்?
புதுக் கேள்வியாக இருக்கிறதா, பதிலைப் பார்ப்போம்.
இரு மடங்கு – double
மூன்று மடங்கு – triple
நான்கு மடங்கு – quadruple
ஐந்து மடங்கு – quintuple
ஆறு மடங்கு – sextuple
ஏழு மடங்கு – septuple
எட்டு மடங்கு – octuple
ஒன்பது மடங்கு – nonuple
10 மடங்கு – decuple
இவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். இன்னும் நிறையவே இருக்கிறது.
பங்குச் சந்தையில் உங்கள் முதலீடு டபிளா அல்லது ட்ரிபிளா?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்