பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்.

சிங்கள முகமூடி அணிந்துகொண்டு நாட்டின் நன்மதிப்பையும் பெறுமதிமிக்க வரலாற்றையும் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற ஒரு வேலைத்திட்டம் பிரபாகரன் காலத்தில் இருக்கவில்லை என்பதை பகிரங்கமாக கூற வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை முஸ்லீம் சமூகம் பறித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்