ஒரே அடியில் சீனாவை சின்னாபின்னமாக்க இந்தியா தயார் !! : மிரளவைக்கும் அமெரிக்க அணு ஆயத வல்லுநர்கள்!

அடிக்கடி சீண்டி பார்க்கும் சீனாவின் சவாலை சந்திக்க இந்தியாவும் தயாராகிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சீனா இடையேயான பிரச்சனை குறித்து அமெரிக்காவின் முன்னணி இணையதளம் ஒன்றிற்கு அந்த நாட்டின் அணு ஆயத வல்லுநர்களான ஹன்ஸ் எம்.கிறிஸ்டென்சன் மற்றும் ராபெர்ட் எஸ்.நோரிஸ் ஆகியோர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர்.

அவர்கள் எழுதிய கட்டுரையில், பொதுவாக பாகிஸ்தானைக் கருத்தில் கொண்டே இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புகள் மற்றும் ஆயுத பலத்தை பெருக்கும் நடவடிக்கைகள் இருக்கும்.

ஆனால்,தற்போது அந்த நிலை மாறி சீனாவையும், அதன் அணு ஆயுதக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்தியா தனது ஆயுதங்களை புதுப்பிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல்,இந்தியாவின் தென் பகுதியில் இருந்து சீனாவின் எந்தவெரு பகுதியையும் ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்கும் வகையிலான ஆயுதங்களை உருவாக்குவதிலும் இந்தியா தீவிரம் காட்டி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிடம் வாலாட்டினால் அது சீனாவுக்குத்தான் பேராபத்தாக முடியும்.என்பதை உணர்ந்த சீன வெறுமனே இந்தியாவை மிரட்டி பார்க்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்