ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வட்டி வீதத்தனை அதிகரித்துள்ள மத்திய வங்கி!

கனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தனை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டில் 0.5 சதவீதமாக இருந்த வட்டிவீதம், தற்போது 0.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது நாட்டின் பொருளாதாரத்தினை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்க காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது காணப்படும் ஏற்றுமதி மற்றும் வர்த்தக நிலைமைகள் உள்ளிட்ட பொருளாதார நிலவரங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னைய வரலாறுகளுடன் ஒப்பிடுகையில் வட்டிவீதம் இன்னமும் குறைவான அளவிலேயே காணப்படுவதாகவும், இது இன்னமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கு கனேடியர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்