பிரித்தானிய அரசு பிரெக்சிற் சட்டவரைபை தயாரித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டவரைபை பிரித்தானிய அரசாங்கம் முறையாக தயாரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை பிரித்தானிய சட்டத்தில் மாற்றுவதற்கான விபரங்களை இந்த சட்டவரைபு முன்மொழிகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ், ‘ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான செயற்பாட்டில் இந்த சட்டவரைபு முக்கிய மைல்கல் ஆகும். இது சட்டத்தின் முக்கியமாக பகுதிகளில் ஒன்றாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி சட்டவரைவில், ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருதல், 2019 மார்ச் மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது திடீர் விதிமுறை மாற்றங்களை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமர் தெரேசா மே-யினால் இந்த சட்டவரைபானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்