அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஐநா-வுக்கும் ஆப்பு வைப்போம் : வடகொரியா பகிரங்க மிரட்டல்.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதம் மற்றும் ஏவுகனை சோதனைகளை செய்து வருகிறார்.

இதற்கு ஜப்பான், தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவத்து வருகிறது. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்படைகளை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்தது.

இதனால், வடகொரியா மீது போர் தொடுத்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்தி அமெரிக்காவை அழிப்போம் என்று பகிரங்கமாக அறிவித்தது.

வடகொரியாவின் அறிவிப்பால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐநா மன்றம் அவசர கூட்டம் நடத்தி, வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக, மேலும் சில பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. தங்களது நாட்டை பாதுகாத்து கொள்வது, தங்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது.

வடகொரியா மீது ஐநா தடைகளை விதித்தால், அமெரிக்காவுக்கு எதிராக மட்டுமல்ல, ஐநாவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்