பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு.

-மன்னார் நிருபர்-
(15-07-2017)
-மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகை ஸ்தளங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை காலை வெண்கள செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த கலந்தரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,செட்டிக்குளம் பங்குத்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், வெண்கள பிரதேசச் செயலக அதிகாரிகள், திணைக்களத்தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள்,உற்பட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆராம்பமாகவுள்ள திருவிழா ஆவனி மாதம் 6 ஆம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.
இதன் போது குறித்த திருவிழாவிற்கு வரும் பக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலய பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேளைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக மலசல கூட வசதிகள், குடி நீர்,சுகதாரம்,பாதுகாப்பு,போக்குவரத்து உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்