அடுத்த பிக்பாஸ் குழு வந்தாச்சு..!! அடிச்சுக்க போவது உறுதி..!! நாளை முதல் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக போகிறது..!!

பாலிவுட்டில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஈடுபாடு தற்போது கோலிவுட் டோலிவுட்டிலும் காணப்படுகிறது.

தமிழில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

வெற்றிகரமாக மக்களிடையே கடந்தாலும் நிகழ்ச்சியில் பல சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

தற்போது கமலுக்கு இது குறித்த பலநெருக்கடிகள் எழுகிறது..

இந்நிலையில் தெலுங்கிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நாளை (16.07.2017) முதல் கலக்க உள்ளது..

இதனை தொகுத்து வழங்க உள்ளவர் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர்…. ஸ்டார் மா என்ற பிரபல தெலுங்கு தொலைக்காட்சி இதனை ஒளிபரப்புவுள்ளது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால், இதில் தமிழ் ஹீரோயன்களாகிய சினேகா, ரம்பா மற்றும் சதா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.

சினேகா தற்போது தெலுங்கு படங்களில் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இவரை அங்கு நாம் எதிர்பார்க்கலாம்

சதா தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளதால் அவரையும் எதிர் பார்க்கலாம்.

என திரைதுறை வட்டாரங்கள் கூறுகின்றன..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்