போச்சு…. கேள்வி கேட்டால் இன்னும் இருக்கு… ஜி.எஸ்.டி வந்த பிறகு இதெல்லாமா நடக்கும்..?

 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜிஎஸ்டி வரி முறையை மணியடித்து வைத்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த ஜூலை ஆம் தேதி நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

சரி நாட்டையே உலுக்கும் சீர்திருத்தம் என்று வேறு சொன்னார்கள். உலுக்குகிறதா என்று களத்தில் போய் பார்த்தல்,

ஒரு பக்கம் மக்கள் எதிர்த்து போராடி வந்தாலும், சில எந்த வித சலனமும் இன்றி தங்கள் வியாபாரத்தை பார்த்து வருகின்றனர்.

ஏனென்றால் வரி சுமை முழுவதையும் மக்கள் தலையில் கட்ட பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும் மக்கள் வாங்கி தானே ஆக வேண்டும்.

மேலே படத்தில் உள்ள விலை பத்து ரூபாய்.. இதன் அளவு குறைந்திருகேன்னு சந்தேகமாக இருந்தது.

அளவு குறைஞ்சி ரொம்ப நாளானாதாக சொன்னார் கடைக்காரர்.

‘அதோட இது ஸ்டாக் இருக்கும்வரைதான் விப்பேன்’ என்றார்.

ஏன் என்று கேட்டேன். ஜி.எஸ்.டிக்கு முன்பாக 9 ரூபாய்க்கு கொள்முதல் செய்தேன்.

இப்போ அடக்கவிலையே 9.70 ரூபாய் என்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை என்றார்.

10 ரூபாய் பாக்கெட்டில் முன்பு 15 பீஸ் இருக்கும்.இப்போ 12தான் இருக்கு.

முன்பெல்லாம் இந்த பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்தால்.

உள்ளே இன்னொரு பாதுகாப்பு பேப்பரோ அட்டையோ இருக்கும்.. இப்போ அதுவும் இல்லை.

நாடு முன்னேறுகிறதா..? சிறுவியாபாரிகள் வாழ்வார்களா.? என்ற கேள்வி தான் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதற்கு தீர்வு கண்டு விட்டால் ஜி.எஸ்.டி நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்