பிரம்ரன் நகரின் பிரமாண்டம் ‘கரபிராம் 2017’ –ஈழம் சாவடி தமிழர்களின் வரலாற்றுத் தடம் பதிப்பின் முதலாவது நாள் நிகழ்வு.

 

பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டம், 5வது தொடர் வருடமாக
பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் (14.07.2017) முதல் நாள் நிகழ்வு, பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் ஆரம்பமானது.

இன் நிகழ்வுக்கு பல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுஇருந்தமை குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வு கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி நிகழ்வு ஆரம்பமானது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

மேலும் இன் நிகழ்வுக்கு ஒன்ராரியோ எதிர்க்கட்சித்தலைவர் தனது வாழ்த்துச்செய்தியில், ஈழம்சாவடி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பல்கலாச்சார சமூகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வலுச்சேர்ப்பதாகவும், தமிழ் கலை கலாச்சாரங்களை வளமாக்கும் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழம் சாவடி யூலை 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மிக பிரமாண்டமாக ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிவரை கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் இன்று இரண்டாம் நாள்நிகழ்வு மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் நடைபெறவுள்ளது.

ஈழம் சாவடி நிகழ்வில் உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி இன் நிகழ்வுநாட்களில் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையும் என முதல் நாள் நிகழ்வில் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

 


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்