பாஸ்புக் என்ட்ரி மிஷினை ஏடிஎம் என நினைத்து திருடிய கூட்டம்.

இந்தி படித்து முன்னேறி, பாஸ்புக் என்ட்ரி மிஷினை, ஏடிஎம் என நினைத்து திருடிய கூட்டம்: இந்தி படித்தால் தான் அறிவு வளரும்- யாருங்க சொன்னது..?

வங்கிகள் ஏடிஎம் வசதியை 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியபோது பெரும் வரவேற்பு இருந்தது.

பின்னர் டெபிட்கார்டுகளாக மாற்றப்பட்டது. 2009 ஏப்ரல் முதல் பிற வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது.

வங்கிகளும் கூட வேலை மிச்சம் என்பதால், வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதை ஊக்குவித்தன.

பல வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்வதையே மறந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஏடிஎம் பயன்பாடு அதிகரித்து விட்டது.

எந்த அளவுக்கு பயன்பாடு அதிகரித்ததோ அந்த அளவிற்கு திருட்டும் பெருகி விட்டது. இயந்திரத்தை உடைத்து கொள்ளை என்பதே பெரிய விசயம்.

அதிலும் சில இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி கொண்டு போன சம்பவமும் நடந்துள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, தற்போது இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றுபடுத்தி பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் சரி, வெளி மாநிலத்திலும் சரி இந்தி மொழி பற்றாளர்கள் சிலர், இந்தி படித்தால் தான் அறிவு வளரும்.

இந்தி மொழியை அனைவரும் படிப்பது அவசியம் என்று நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

அதனை எதிர்க்கும் விதத்தில், கடந்த வருடம் வெளி மாநிலத்தில் சிலர் பாஸ் புக் என்ட்ரி போடும் இயந்திரத்தை தவறுதலாக ஏடிஎம் இயந்திரம் என்று நினைத்து திருடி சென்று விட்டனர்.

இந்தி அறிவு அவர்களுக்கு எந்த அளவில் ஞனத்தை வளர்த்துள்ளது பாருங்கள் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்த புகைப்படம் தான் இப்போதைக்கு மொழி சார்ந்த வாதம் முன்வைக்கப்படும் போது பரப்பப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்