வட இந்தியர்கள் எழுப்பிய சர்ச்சைக்கு முதன் முதலாக பதில் அளித்த ரகுமான்

ரகுமான் சமீபத்தில் லண்டனில் ஒரு இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். இதில் நிறைய தமிழ் பாடல்கள் இருந்ததால் ஒரு சிலர் எழுந்து சென்றதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது, பல தொலைக்காட்சிகளில் விவாத மேடை வரை வந்தது.

இந்நிலையில் நேற்று IIFA Awards2017 அமெரிக்காவில் நடந்தது, இதில் ரகுமான் கலந்துக்கொள்ள, அவரிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு ரகுமான் ’மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை சிறப்பான பாடல்களை தர நான் முயற்சிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்