ரகுமான் குறித்த சர்ச்சைக்கு சிம்பு அதிரடி பதில்..!!

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் AAA படத்தை தொடர்ந்து தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக அவர் டுவிட்டர் பக்கமே வரவில்லை, ஆனால், தற்போது ரகுமான் குறித்து ஒரு சில கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏனெனில் ரகுமான் லண்டனில் ஹிந்தி பாடல்களை பாடவில்லை என வட இந்தியர்கள் ஒரு சிலர் எழுந்து சென்றதாக கூறப்பட்டது, அதை தொடர்ந்து இதற்கு பெரிய விவாதமே நடந்தது.

இதற்கு சிம்பு ’இசை என்பதற்கு மொழியே இல்லை, மக்களை ஒன்றினைக்கும் ஒரே விஷயம் இசை தான்’ என்பது போல் கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்