ஒழுக்க விதிகளை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனைகள்!

நாடாளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறிச் செயற்படும் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனையளிப்பதற்குரிய அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வில்  (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்துவதன் மூலம் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எட்டு வாரங்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருக்கின்றது” என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்