தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸிற்காக 335 ஓட்டங்களை குவித்தது.

இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்பின் 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிஸ்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 343 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனடிப்படையில், இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டி நிறைவடைவதற்கு இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி, தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்